வளரும் நாடுகளின் அழிவுக்கு வழிவகுக்கும் ரஷ்யா:அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
உக்ரைனில் விளைவிக்கப்பட்ட உணவு தானிய பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பாக துருக்கி, ஐக்கிய நாடுகள் சபை, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் காலாவதியான நிலையில், ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இந்நிலையில் உக்ரைன் உணவு தானியங்களை தரை வழியாக ஏற்றுமதி செய்யும் பணியில் பிரான்ஸ் ஈடுப்பட்டுள்ளது என அந்த நாட்டின் விவசாயம் மற்றும் உணவு அமைச்சர் மார்க் ஃபெஸ்னோ தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து ரஷ்யாவின் செயற்பாடு குறித்து அமெரிக்கா தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன் வளரும் நாடுகளின் அழிவுக்கு ரஷ்யா வழிவகுப்பதாக குற்றம் சுமத்தியுள்ளது.
அமெரிக்காவின் குற்றச்சாட்டு
உக்ரைனுடன் தானியங்களை ஏற்றுமதி செய்யும் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய பின்னர் வளரும் நாடுகளில் பட்டினி நிலை ஏறபடுவதற்கு ரஷ்யா முடிவு செய்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
துருக்கியால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட ஜூலை ஒப்பந்தத்தை மேற்பார்வையிடும் அமைப்பு, வார இறுதியில் ரஷ்யா விலகுவதாக அறிவித்ததை அடுத்து புதன்கிழமை முதல் தானிய ஏற்றுமதி நிறுத்தப்படும் என்று கூறியது.
இந்த முயற்சியை சீர்குலைக்க கிரெம்ளின் எடுக்கும் எந்த முடிவு தொடர்பிலும் மாஸ்கோ கவலைப்படவில்லை என்று மாநிலத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
