மூன்றாம் உலகப் போரின் இருண்ட நிழல்கள் எழுகின்றன!
உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பை ரஷ்யா நேற்று (24ம் திகதி) தொடங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்ய - உக்ரைன் எல்லைக்கு அருகே நிலைகொண்டுள்ள ரஷ்ய இராணுவத்தினர் நேற்று காலை முதல் உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மீது வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்யப் படைகள் உக்ரைன் நகரங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ஷெல்களை வீசத் தொடங்கியுள்ளன. தாக்குதல் தொடங்கிய சிறிது நேரத்திலேயே உக்ரைன் தலைநகர் கிவில் சைரன்கள் ஒலித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கிவ் விமான நிலையத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு மற்றும் வெடி சத்தங்களும் கேட்டன. விமான நிலையத்தில் உள்ள இராணுவ மையத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு உக்ரைனில் தனிநாடு கோரி போராடும் பிரிவினைவாதிகளை பாதுகாக்க ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனை முழுமையாக ஆக்கிரமித்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரஷ்ய தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.
உக்ரைனில் வெளிநாட்டு தலையீடு இருப்பதாகவும் ரஷ்ய ஜனாதிபதி எச்சரித்துள்ளார், உக்ரைனை நிராயுதபாணியாக்கி அதன் தலைவர்களை நீதியின் முன் நிறுத்துவதே தனது இலக்கு என்று கூறினார்.
பல வாரங்களாக உக்ரேனிய எல்லைக்கு அருகில் நிலைகொண்டிருந்த ரஷ்யாவின் துருப்புக்கள் உக்ரேனுக்குள் நுழைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, ஐரோப்பாவை மீண்டும் ஒரு போருக்குள் தள்ள உதவ வேண்டாம் என்று ரஷ்யாவிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
உக்ரைன் தொடர்பில் ரஷ்ய மக்களுக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஐரோப்பாவில் போர் மூளுமா இல்லையா என்பதை ரஷ்யா தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் உக்ரைன் ஜனாதிபதி ரஷ்ய மொழியில் தெரிவித்தார்.
எட்டு ஆண்டுகளாக கிழக்கு உக்ரைன் பகுதிகளான லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்கில் அதிகாரத்தைக் கைப்பற்ற உக்ரேனியப் படைகளுடன் சண்டையிட்டு வரும் பிரிவினைவாதிகளை ஆதரித்து வரும் ரஷ்யா, அந்த பகுதிகளை சுதந்திர நாடுகளாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
இரு பிராந்தியங்களையும் சுதந்திர நாடுகளாக ரஷ்ய அதிபர் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை அவசரக் கூட்டத்தை நேற்று (ஜன.24) கூட்டியது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தது.
உக்ரைன் மீதான ரஷ்ய இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், இது நியாயமற்ற மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், உக்ரைன் துருப்புக்களுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நிலைகொண்டுள்ள நேட்டோ படைகளை வலுப்படுத்த அமெரிக்க துருப்புக்களை ஐரோப்பாவிற்கு அனுப்புகிறது.
உக்ரைனின் பாதுகாப்பு சபை உக்ரைனில் அடுத்த 30 நாட்களுக்கு அவசரநிலைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது, மேலும் 27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீதுபொருளாதார தடைகளை விதிக்க ஒப்புக்கொண்டது.
திவயின