உக்ரைன் - ரஷ்ய போர்நிறுத்தம்..! சர்வதேசங்களின் முக்கிய நகர்வு
உக்ரைன் (Ukraine) தனது போர்நிறுத்த திட்டத்தினை வெளிப்படுத்தியதை தொடர்ந்து ரஷ்யாவின் (Russia) ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்துவதற்காக பிரித்தானியாவுடன் (UK) 20 நாடுகள் ஒன்று சேர்ந்துள்ளன.
பிரித்தானியாவும் பிரான்சும் போருக்குப் பின்னரான தீர்வுகளின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய மற்றும் கமன்வெல்த் துருப்புக்களுடன் ஒரு அமைதி காக்கும் படையை களமிறக்குவதற்கு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.
கெய்ர் ஸ்டார்மர் முன்மொழிந்துள்ள இந்த திட்டமானது தற்போது ஆரம்ப நிலையிலேயே இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ட்ரம்பின் தீர்மானம்
இருப்பினும், இதுவரையான திட்டம் தொடர்பிலான விவாதங்கள் அனைத்தும் சாதகமாகவே அமைந்துள்ளன என்றே அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை, எடுக்கப்பட்ட குறித்த அமைதி காக்கும் படை திட்டத்தின் இறுதி வடிவம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் விவாதிக்கப்படும் என்றே கூறப்படுகிறது.
ஆனால், சர்வதேச நாடுகளின் இந்த நகர்வுக்கு ரஷ்யாவில் இருந்து உடனடியாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோ, இது நேட்டோ உறுப்பினர்களின் நேரடி ஈடுபாட்டைக் குறிப்பதாகவும் அதை அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் நிலைப்பாடு
அத்துடன், உக்ரைனுக்கு எதிரான போரை தொடங்கியது ரஷ்யா என்பதால், ரஷ்யாவையே அதை நிறுத்த அனைத்து நாடுகளும் அழுத்தமளிக்க வேண்டும் என்பதே உக்ரைன் முன்வைக்கும் கோரிக்கையாக உள்ளது.
அது மாத்திரமன்றி, எந்தவொரு சமாதான ஒப்பந்தமும் வான் மற்றும் கடல் தாக்குதல்களை நிறுத்துவதன் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
மேலும் ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், "எரிசக்தி அல்லது பொதுமக்கள் உட்கட்டமைப்பு மீதான இராணுவ நடவடிக்கை மற்றும் கருங்கடலில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
அத்துடன் அனைத்து போர்க்கைதிகளையும் விடுவிப்பது நம்பிக்கையை நிலைநாட்டுவதற்கான ஒரு வழிமுறையாகவும் பயன்படுத்தப்படலாம்.
உக்ரைன் மக்களுக்கு அமைதி வேண்டும். ஆனால் உக்ரைன் மண்ணை விட்டுக்கொடுத்து அதை அடையும் எண்ணம் இல்லை” என கூறியுள்ளார்.
இதற்கிடையில், சவுதி அரேபியாவில் உக்ரைன் அதிகாரிகளுடன் அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை முன்னெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்து சமுத்திரத்தை பாதுகாக்க உக்ரைனில் இருந்து ட்ரம்ப் வெளியேறுகிறாரா..! 56 நிமிடங்கள் முன்

தெருக்களில் கிடந்த சடலங்கள்! உள்நாட்டில் வெடித்த கலவரம்..இரண்டு நாட்களில் 1000 பேர் பலி News Lankasri

Optical illusion: பந்திற்குள் மறைந்திருக்கும் "5" களில் மறைந்துள்ள "3" ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
