உக்ரைனில் மக்கள் தனித்து விடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கவலை: உலக செய்திகளின் தொகுப்பு (Video)
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 2 ஆவது நாளாகவும் தொடர்வதால் அங்கு தொடர்ந்து குண்டுவெடிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் என உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி மிகவும் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மேற்கொண்ட சரமாரியாக குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் காரணமாக உக்ரைன் நிலைகுலைந்து போய் உள்ளது.
உலகின் ஒட்டுமொத்த பார்வையும், ஒரே நாளில் உக்ரைன் நாட்டின் மீது திரும்பி இருக்கிறது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரால் அங்கு கடும் பதற்றம் நிலையேற்பட்டுள்ளதுடன் மக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஆட்கொண்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றை உலக செய்திகளின் தொகுப்பு,