உக்ரைன் ஜனாதிபதி பயணித்த கார் விபத்துக்குள்ளானது - விசாரணைகள் தீவிரம்
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து தலைநகர் நேற்று (14.09.2022) கிய்வில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இதில் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஆபத்தான காயங்கள் ஏற்படவில்லை என ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உடன் பயணித்த வைத்தியரால் பரிசோதனை
ஜனாதிபதியுடன் வந்த வைத்தியர் ஒருவரால் சோதனை செய்யப்பட்டதாகவும், இதன்போது கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பில் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக இன்று (புதன்கிழமை) நாட்டின் படைகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றிய நிலையில், கார்கிவின் வடகிழக்கு பிராந்தியத்தில் புதிதாக விடுவிக்கப்பட்ட இசியத்தை ஜெலென்ஸ்கி பார்வையிட்டார்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan
