போர் ஆரம்பித்ததன் பின்னர் முதன் முறையாக வெளிநாடு செல்லும் செலன்ஸ்கி
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி வோஷிங்டனுக்குச் சென்று, ஜனாதிபதி ஜோ பைடனை, சந்திக்கவுள்ளார்.
அத்துடன் காங்கிரஸ் உறுப்பினர்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் வெளிநாட்டு பயணம்
2022, பெப்ரவரி 24 அன்று ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, செலன்ஸ்கி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணமாக இது அமைகிறது.
இன்றைய சந்திப்புக்களின் போது, உக்ரைனுக்கு சுமார் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இராணுவ உதவியை அமெரிக்கா அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உதவிகளில் பேட்ரியாட் ஏவுகணைகள் மற்றும், ரஷ்ய இலக்குகளை துல்லியமாக தாக்குவதற்கு உதவும் வகையில், விமானத்தில் ஏவப்படும் ஏவுகணைகளுக்கான வழிகாட்டுதல் கருவிகள் என்பன உள்ளடக்கப்படலாம் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
செலன்ஸ்கியும் பைடனும் வெள்ளை மாளிகையில் சந்திப்பார்கள் என்று
எதிர்பார்க்கப்படுகிறது