இரண்டாம் கட்டமாக மீண்டும் தீவிரமடையும் போர்! ரஷ்யாவிற்கு எதிராக களமிறங்கும் பிரித்தானிய ஏவுகணைகள்
பிரித்தானியா உக்ரைனுக்கு Harpoon கப்பல் எதிர்ப்பு ஏவுகணை மற்றும் வான் பரப்பில் இருந்து இலக்கை தாக்கக்கூடிய Storm Shadow ஏவுகணை ஆகியவற்றை வழங்குவது தொடர்பாக பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவை எதிர்த்து தொடர்ந்து போராட ஆயுத உதவியை வழங்குமாறு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மேற்கத்திய நாடுகளிடம் கோரிக்கையொன்றினை முன்வைத்திருந்தார்.
இதனை தொடர்ந்து அவசரமாக பிரித்தானியா - பிரான்ஸ் நாட்டிற்கு சென்று இருநாட்டு தலைவர்களையும் நேரடியாக சந்தித்து தனது கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
ரஷ்ய படைகளுக்கு எதிராக தயாராகும் படையினர்
இந்நிலையில் உக்ரைனுக்கு ஹார்பன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் வான்பரப்பில் இருந்து தாக்கக்கூடிய ஏவுகணைகளை பிரித்தானியா வழங்கலாம் என்ற தகவல் தெரியவந்துள்ளது.
இதேவேளை, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் பாதுகாப்பு நிருபர் ஜார்ஜ் கிரில்ஸ், நவீன உலகில் மிகப்பெரிய ஐரோப்பிய எதிர்ப்பு சக்தியுடன் உக்ரைன் போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைனிய பாதுகாப்பு வீரர்கள் பிரித்தானியாவின் புதிய ஏவுகணைகளை கிரிமியாவில் உள்ள ரஷ்ய படைகளுக்கு எதிராக பயன்படுத்த தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.