ரஸ்யா படையெடுக்கும் சாத்தியம்: உக்ரைன் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு
உக்ரைனில் 2022 பெப்ரவரி மாதம் 16ஆம் திகதியை “தேசிய ஒற்றுமை நாள்” என்ற வகையில் கடைபிடிக்குமாறு அந்த நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) அறிவித்துள்ளார்.
தமது நாட்டின் மீது ரஸ்யாவின் படையெடுப்புக்கு இந்த நாளில் சாத்தியம் உள்ளதாக தெரிவித்தே ஜனாதிபதி இந்த முக்கிய அறிவிப்பை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த தினத்தில் உக்ரைனியர்களின் கட்டடங்களில் தமது நாட்டு கொடிகளை பறக்க விட்டு தேசிய கீதத்தை ஒரே குரலில் பாடுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பெப்ரவரி 16 தாக்குதலின் நாளாக இருக்கும் என்று நேட்டோ படையினர் கூறியுள்ளனர். எனவே அதனை ஒற்றுமையின் நாளாக மாற்றுவதற்கு தீர்மானித்ததாக ஜெலென்ஸ்கி நாட்டு மக்களுக்கான உரையில் குறிப்பிட்டுள்ளார்.