ரஷ்யா மீது உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதல்
ரஷ்யாவின்(Russia) ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உள்ள ஒரு விமான நிலையத்தில் ஆளில்லா விமானங்களை சரமாரியாகப் பயன்படுத்தி குறைந்தது ஆறு இராணுவ விமானங்களை அழித்ததாகவும் மேலும் எட்டு விமானங்களை மோசமாக சேதப்படுத்தியதாகவும் உக்ரைனிய(Ukraine) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள், 44 உக்ரேனிய ஆளில்லா விமானங்களை தாம் இடைமறித்ததாகவும், ஒரு மின் துணை நிலையம் மட்டுமே தாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
எல்லை தாண்டிய தாக்குதல்கள்
இந்தத் தாக்குதலானது போரில் கிய்வின் மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களில் ஒன்றாக கருத்தப்படுகிறது. சமீப வாரங்களில் உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் உட்பட சிவிலியன் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது,
இதன் போது உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதலில், விமானநிலையத்தின் பணியாளர்களில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் உண்மையாக இருந்தால், குறித்த தாக்குதல் உக்ரைனின் மிக வெற்றிகரமான எல்லை தாண்டிய தாக்குதல்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதேவேளை கடந்த அக்டோபரில், அமெரிக்காவால் நன்கொடையாக வழங்கப்பட்ட நீண்ட தூர போலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்ய ஆக்கிரமிப்பு பிராந்தியங்களில் உள்ள இரண்டு விமானநிலையங்களில் ஒன்பது ரஷ்ய உலங்கு வானூர்தி (Helicopter) அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |