கிறிஸ்மஸ் தினத்தன்று உக்ரைனில் நடக்கப்போவது என்ன! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
கிறிஸ்மஸ் விடுமுறை காலத்தில் ரஷ்ய தாக்குதல்கள் அதிகரிக்கக்கூடும் என உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காணொளியில் உரையொன்றில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவித்ததாவது,
”தனது மக்களை வான்வழி தாக்குதல் எச்சரிக்கைகளில் கவனம் செலுத்தவும், ஒருவருக்கொருவர் உதவவும் மற்றும் ஒருவரை ஒருவர் கவனிக்கவும்’ என வலியுறுத்தியுள்ளார்.
அதிகரிக்கும் ரஷ்ய பயங்கரவாதம்
நிலைமையை மறுபரிசீலனை செய்வதற்காக தனது உயர்மட்ட இராணுவத் தளபதிகளைச் சந்தித்ததாகவும், தனது அரசாங்கம் பயங்கரவாத அரசாங்கத்தின்ன் பல்வேறு நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருவதாகவும் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
‘விடுமுறை காலம் விரைவில் நெருங்கி வருவதால், ரஷ்ய பயங்கரவாதிகள் மீண்டும் தங்கள் நடவடிக்கைகளை முடுக்கிவிடலாம். கிறிஸ்தவ மதிப்புகள் அல்லது அந்த விடயத்தில் எந்த மதிப்பும் அவர்களுக்கு இல்லை’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய நாட்களில், உக்ரைனிய இராணுவத் தலைமையானது நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி விநியோகத்தில் புதிய ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.