போரை நிறுத்த இந்தியாவிடம் கோரிக்கை முன்வைத்துள்ள உக்ரைன் - உலக செய்திகளின் தொகுப்பு
உக்ரைன் மீதான போரில் இந்தியாவின் பங்களிப்பை கூடுதலாக எதிர்பார்ப்பதாக உக்ரைன் அமைச்சர் எமினி சபோரோவா டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர் நியாயமான முறையில் முடிவுக்கு வராவிட்டால் அது மிகப்பெரிய போர்களுக்கு வழி வகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் நிகழ்ந்துள்ள போரை நிறுத்துவதற்கு இந்தியா பங்களிப்பு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் உக்ரைன் பிரதமரும், அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொலைபேசியில் தன்னிடம் பேசுமாறும், உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு வருமாறும் அதிபர் ஜெலன்ஸ்கி அனுப்பிய அழைப்பை மோடியிடம் அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,