பாதுகாப்பு உத்தரவாதங்களை வலுப்படுத்தும் உக்ரைன்
உக்ரைன் தமது பாதுகாப்பு உத்தரவாதங்களைப் வலுப்படுத்தும் நோக்கில் பிரித்தானியாவுடன் ஆலோசனைகளை நடத்த தயாராக உள்ளதாக உக்ரைனின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் இதுபோன்ற ஒப்பந்தங்களை செயல்படுத்துவதை உக்ரைன் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
நேட்டோ இராணுவக் கூட்டணி
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ இராணுவக் கூட்டணியில் உக்ரைன் சேரும் என எதிர்பார்க்கும் நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட சக்திகளிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பெறுவதற்கு உக்ரைன் தீவிரம் காட்டி வருகிறது.
"இந்த ஆண்டு இறுதிக்குள் இதுபோன்ற முதல் ஒப்பந்தங்களை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள்" என்று உக்ரைன் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி ஆண்ட்ரி யெர்மக் அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
