தீவிரமடையும் போர்க்களம்! உக்ரைன் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல்
ரஷ்யாவினால் இன்று அதிகாலை நடத்தப்பட்ட 18 வான்வழி ஏவுகணை தாக்குதலில் 15 ஏவுகணைகளை உக்ரைனிய வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு வருடங்களுக்கு மேலாக தொடரும் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது.
உக்ரைன் பகுதிகள் மீது இன்று ரஷ்யா 18க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஏவுகணை தாக்குதல்
இது தொடர்பாக உக்ரைன் ஆயுதப் படையின் தளபதி வலேரி ஜலுஷ்னி வழங்கிய தகவலில், திங்கட்கிழமை அதிகாலை 2:30 மணியளவில் ரஷ்ய படையெடுப்பாளர்கள் முலோபாய விமானங்களில் இருந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினர் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் உக்ரைனிய தலைநகர் கீவ் மீது ரஷ்யா செலுத்திய அனைத்து ஏவுகணைகளும் அழிக்கப்பட்டதாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடரும் தாக்குதல் நடவடிக்கை
அத்துடன் மூன்று நாட்களில் நகரத்தின் மீதான இரண்டாவது தாக்குதல் என்றும், ஆனால் இவற்றில் பொதுமக்கள் உயிரிழப்பு மற்றும் குடியிருப்பு வசதிகள் அல்லது உள்கட்டமைப்புகள் அழிக்கப்படவில்லை என்றும் நகர நிர்வாகம் டெலிகிராமில் பதிவிட்டுள்ளது.
தலைநகர் கீவ் பிராந்தியத்தை பாதுகாக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பாட்டில் வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.