உக்ரைன் - மரியுபோல் நகரில் கண்டெடுக்கப்பட்ட 200 சடலங்கள்
உக்ரைன் ரஷ்ய போர் மூன்று மாதங்களாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது.
உக்ரைனின் முக்கிய துறைமுக நகரான மரியுபோலை ரஷ்யா முழுமையாக கைப்பற்றியது.
அந்நகரத்தின் கட்டிடங்கள், ரஷ்ய படைகளின் தாக்குதலில் முழுமையாக சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் உக்ரைன் - மரியுபோலில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் இடிபாடுகளைத் தோண்டிய தொழிலாளர்கள் அடித்தளத்தில் 200 சடலங்களைக் கண்டெடுத்தனர் என்று உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூன்று மாத போரின் கொடிய பயங்கரவாத தாக்குதல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
சடலங்கள் சிதைந்து, துர்நாற்றம் வீசியதுடன் சடலங்கள் அக்கட்டடங்களின் கம்பங்களில் தொங்கியது என்று மேயரின் ஆலோசகர் பெட்ரோ ஆண்ட்ரியுஷ்செங்கோ தெரிவித்துள்ளார்.
குறித்த சடலங்கள் எப்போது கண்டுபிடிக்கப்பட்டன என்பது தொடர்பான தகவலை அவர் வெளியிடவில்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது போரின் கொடிய தாக்குதல்களில் ஒன்றாகும் என தெரிவித்துள்ளார்.



திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
