பெரும் போர் முனைக்கு தயாராகும் “உக்ரைன் போர்க்களம்" உக்ரைனுக்கு குவியும் ஆயுத உதவி!(வீடியோ இணைப்பு)
உக்ரைன் போர் தீவிரமடையும் அச்ச நிலை தோன்றியுள்ளது.
தொடர்ந்தும், உக்ரைன் மீது தாக்குதல்களை நடத்தி வரும் ரஸ்ய படையினருக்கு எதிராக போரிட, மேற்கு நாடுகள் பெருமளவான ஆயுதங்களை அனுப்புவதாக உறுதியளித்துள்ள நிலையிலேயே இந்த அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
350 மில்லியன் டொலர் பெறுமதியான ஜவலின் தாங்கி எதிர்ப்பு, கவச அமைப்பு மற்றும் விமான எதிர்ப்பு அமைப்புகளை உக்ரைனுக்கு அனுப்புவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
1000 தாங்கி எதிர்ப்பு உந்துகனைகள், மற்றும் 500 விமான எதிர்ப்பு ஏவுகனைகளை அவசரமாக அனுப்புவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது.
பன்ஸர்போஸ்ட்-3 என்ற 50 தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் 400 ஏறிகனைகளை அனுப்புவதாக நெதர்லாந்து அறிவித்துள்ளது.
சுலோவேக்கியாவில் உள்ள நேட்டோ குழுவின் இரண்டு நாடுகள், தாம் கூட்டு வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளன.
முன்னதாக, “நேட்டோ” தனது படைகளை, எந்தவொரு தற்செயலுக்கும் விரைவாக பதிலளிக்கும் வகையி;ல், கிழக்கு ஐரோப்பாவுக்கு அனுப்ப ஆரம்பித்துள்ளது