உக்ரைன் போர்க்களம் - ரஷ்ய தாக்குதலில் 300 பேர் பலி!(Photos)
உக்ரைனில் கடந்த வியாழன் அன்று தொடங்கிய ரஷ்ய படையெடுப்பில் இதுவரை குறைந்தது 136 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இறந்தவர்களில் 13 குழந்தைகளும் இருக்கலாம் என நம்பப்படுகிறது
எனினும்,உண்மையான இறப்பு எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கனரக பீரங்கி தாக்குதல்கள், வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பிற பரந்த தாக்கம் கொண்ட வெடிபொருட்கள் ஆகியவற்றின் விளைவாக பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதுவரை நடந்த சண்டையில் சுமார் 400 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், உக்ரைன் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் 352 பொதுமக்கள் இறந்ததாகவும், 1,684 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கின்றன.

இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri