தொடரும் மத்திய கிழக்கு பதற்றம் - ஈரானின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்
மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள பல்வேறு நாடுகளில் உக்ரைன் படைகள் ஈரானின் ஷாஹேத் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தின என்று அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா பயன்படுத்திய அதேவகை ட்ரோன்களை முறியடிக்க தோழமை நாடுகளுக்கு உதவும் வகையில் உக்ரைன் இதை செய்தததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்
உள்நாட்டில் தயார் செய்யப்பட்டு போர்க்களத்தில் சோதிக்கப்பட்ட இடைமறிப்பு ட்ரோன்களைப் பயன்படுத்தி இதை செய்தோம் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி முதல் இஸ்ரேல், அமெரிக்கா இரு நாடுகளும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தன.
அத்துடன் சவுதி அரேபியா, குவைத், கட்டார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.
இதில் ஷாஹேத் என்ற ட்ரோன்களை அதிக அளவில் பயன்படுத்தியது. இதை வளைகுடா நாடுகள் உள்ள வான்பாதுகாப்பு முறியடித்தது. என்றாலும் ஒன்றிரண்டு ட்ரோன்களால் சேதங்கள் ஏற்பட்டது.
இந்நிலையில் மேற்குறித்த ட்ரோன்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.