ஐரோப்பிய தலைவர்களுக்கு ரஷ்ய தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு நெருங்கிய போர் குழு தலைவன், வாக்னர் கூலிப்படையின் உரிமையாளரான எவ்ஜெனி பிரிகோஜின் இரத்தக்கறை படிந்த சுத்தியல் ஒன்றை ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு அனுப்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு ரஷ்யா என உக்ரைன் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அடையாளப்படுத்தியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இவ்வாறு ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு சுத்தியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ரஷ்யரான 55 வயதுடைய நபர் உக்ரைனுக்கு தப்பியதையடுத்து, இந்த வாக்னர் குழுவானது அவரை கடத்தி, ரஷ்யாவுக்கு கொண்டு சென்று சுத்தியலால் அடித்து கொன்றுள்ளது.
ரஷ்யா பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு
இதனை தொடர்ந்து ரஷ்யாவை பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு என குறிப்பிடுகின்றமைக்கு தமது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.
மேலும், ஐரோப்பிய நாடாளுமன்றம் எந்த சட்டத்தின் அடிப்படையில் இயங்குகிறது என்பது தமக்கு தெரியாது எனவும், இன்று முதல் ஐரோப்பிய நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாகவும் அறிவித்திருந்தார்.
மேலும், சட்டப்பூர்வமாக அறிவிக்கும் முன்னர், தகவல் திரட்டு ஒன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இருப்பினும், இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பதில் தொடர்பில் தகவல் வெளியாகவில்லை என கூறப்படுகின்றது.