உக்ரைனில் அமைதி திரும்பாது: புடின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
உக்ரைன் - ரஷ்ய போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இலக்கை அடையும் வரை உக்ரைனில் அமைதி திரும்பாது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இந்த போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு மேற்கத்திய நாடுகளும் இராணுவ மற்றும் நிதி உதவியை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
ரஷ்ய வீரர்களை நாட்டை விட்டு முழுவதுமாக வெளியேற்ற உக்ரைன் இராணுவ படைகளும், நாட்டை முழுவதும் கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கில் ரஷ்ய வீரர்களும் தொடர்ந்து போரிட்டு வருகின்றனர்.
ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளதாவது,
உக்ரைனில் ஏற்கனவே 6 இலட்சத்து 17 ஆயிரம் வீரர்கள் முகாமிட்டுள்ளனர். எனவே கூடுதல் வீரர்களை அணி திரட்டுவதற்கான அவசியம் ரஷ்யாவுக்கு இல்லை.
மேலும் இந்த போர் நடவடிக்கையின் நோக்கம் நிறைவேறும் வரை உக்ரைனில் அமைதி திரும்பாது.
விளாடிமிர் புடின் கடந்த 24 ஆண்டுகளாக ரஷ்யாவின் ஜனாதிபதியாக இருந்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
