போலியான ஆயுதங்களைக் காட்டி மிரட்டிய உக்ரைன்! பின்வாங்கிய ரஷ்ய படைகள்
உக்ரைன் போலியான ஆயுதங்களைக்காட்டி ரஷ்ய வீரர்களை மிரட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் பகுதிக்குள் அத்துமீறி முன்னேறும் ரஷ்ய வீரர்களை தடுத்து நிறுத்துவதற்காக இரும்பு, பழைய மரம், டயர்கள் போன்றவற்றை கொண்டு போலியான ஆயுதங்களை தயாரித்து போலி ஆயுத குவியல்களை உக்ரைன் வீரர்கள் வைத்துள்ளனர்.
இவ்வாறு வைக்கப்பட்ட போலி ஆயுதங்களை ஆயுதக்குவியலாக நினைத்து திடீரென ரஷ்யா பின்வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏவுகணை தாக்குதல் தீவிரம்
இதன் மூலம் பல வீரர்களின் உயிர்களும் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், தங்கள் உத்தி போரில் கைகொடுத்ததாகவும் உக்ரைன் நாட்டு இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவின் செவாஸ்டோபோலில் உள்ள கருங்கடல் கடற்படை தலைமையகத்தை உக்ரைன் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், இதில் 9 பேர் வரை உயிரிழந்துள்ளதாக16 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மலேசியாவில் கை, கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்! விசாரணையில் வெளியான தகவல்

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan
