ரஷ்யாவிற்கு தொடரும் நெருக்கடி! புதிய பொருளாதார தடைகளை அறிவித்தது பிரித்தானியா
ரஷ்யாவின் 86 நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது புதிய பொருளாதார தடைகளை பிரித்தானியா விதித்துள்ளது.
அதனடிப்படையில் Rosatom நிறுவனத்துடன் சேர்ந்த நிறுவனங்களின் லேசர்கள் உட்பட நவீன பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தடை பட்டியலில், Polyus, Severstal, FESCO, MMK, OMK, TMK, RMK, AFK Sistema, Rosbank, DOM. RF மற்றும் Tinkoff bank ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
#UK imposes sanctions against 86 people and companies from #Russia
— NEXTA (@nexta_tv) May 19, 2023
Companies associated with #Rosatom that produce modern materials and technologies, including lasers, fell under the sanctions.
The sanctions list includes Polyus, Severstal, FESCO, MMK, OMK, TMK, RMK, AFK… pic.twitter.com/1vyRNzIK4W
மற்றுமொரு தடை அறிவிப்பு
இதனை தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து வைரம், தாமிரம், அலுமினியம், நிக்கல் ஆகியவற்றின் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டர் பதிவொன்றினை வெளியிட்டு அவர் இதனை அறிவித்துள்ளார்.
மேலும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு, ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைனின் வெற்றி அவசியம் என்றும், G7 நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக துணை நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |