போரில் இதுவரை களமிறங்காது காத்திருக்கும் முக்கிய ரஷ்ய படைகள்! நிபுணர் குழு பரபரப்பு தகவல்
ரஷ்யா விரைவில் உக்ரைன் மீது அடுத்த தாக்குதலை நிகழ்த்த தயாராவதற்கான அறிகுறிகள் தெரிவதாக அமெரிக்க நிபுணர் குழுவொன்று தெரிவித்துள்ளது.
மேற்கத்திய வட்டாரம், உக்ரைன் மற்றும் ரஷ்ய தரப்பு என அனைத்துமே, ரஷ்யா விரைவில் உக்ரைன் மீது அடுத்த தாக்குதலை நிகழ்த்தத் தயாராவதற்கான அறிகுறிகளைக் காட்டுவதாக The Institute for the Study of War என்னும் அமெரிக்க அமைப்பு தெரிவித்துள்ளது.
நிபுணர் குழு பரபரப்பு தகவல்
நேட்டோ அமைப்பின் போதுச்செயலரான Jens Stoltenberg, ரஷ்யா அமைதிப்பேச்சுவார்த்தைக்குத் தயாராவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை என்றும், அதற்கு எதிராக வேண்டுமானால் ரஷ்யா செயல்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே மாஸ்கோ 200,000 போர் துருப்புக்களை தயார் செய்யலாம் என்றும், அது தொடர்ந்து ஈரான் மற்றும் வட கொரியாவின் உதவியுடன் ஆயுதங்களை சேகரித்துக்கொண்டிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், ரஷ்ய தரப்பிலிருந்து சில சமூக ஊடகவியலாளர்கள், உண்மையில், ரஷ்ய தரப்பில் முக்கியப் படைகள் இன்னமும் போரில் குதிக்கவில்லை என்னும் தகவலை வெளியிட்டுள்ளன.