ரஷ்யாவின் அதிசக்திவாய்ந்த ஏவுகணையை முதல்முறையாக நடுவானில் தாக்கி அழித்த உக்ரைன்
ரஷ்ய இராணுவம் ஏவிய அதிசக்திவாய்ந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையை முதல் முறையாக நடு வானிலேயே தாக்கி அழித்துள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் விமானப்படை தளபதி மைகோலா ஒலேஸ்சுக் இதனை தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் கின்சல் வகை ஹைப்பர்சோனிக் ஏவுகணையை அமெரிக்காவின் பேட்ரியாட் பாதுகாப்பு அமைப்பு மூலம் வானிலேயே இடைமறித்து தகர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க தருணம்
இந்த ரஷ்ய ஏவுகணைக்கு 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் என்பதுடன், ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பறக்கும் தன்மை வாய்ந்தது என்றும் தெரியவந்துள்ளது.
இருப்பினும் இந்த ஆற்றல் மிகுந்த அதிசக்திவாய்ந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக தாக்கி அழிக்கப்பட்டமை வரலாற்று சிறப்பு மிக்க இந்த தருணம் எனவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்த தருணத்தில் உக்ரைன் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாகவும் உக்ரைனின் விமானப்படை தளபதி கூறியுள்ளார்.