போரை எதிர்க்கும் ஒரே நாடு இந்தியா! மோகன் பகவத் தகவல்
போரை எதிர்க்கும் ஒரே நாடு இந்தியா மாத்திரமே என்று ஆர்எஸ்எஸ் என்ற ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், நெருக்கடியான காலங்களில் இலங்கைக்கு உதவ முன்வந்த ஒரே நாடு இந்தியா என்றும் அவர் கூறினார்.
மனித குலத்தின் முன்னேற்றம்
இந்தியா போன்ற தேசியம் உலகில் மனித குலத்தின் முன்னேற்றத்திற்காக சிந்திக்கிறது. சில நாடுகள், வளர்ந்த பிறகு, தங்கள் அதிகாரத்தைச் செலுத்த முயல்கின்றன. இதற்கு முன் ரஷ்யா இதை செய்து வந்தது, பின்னர் அமெரிக்கா அந்த இடத்தை கைப்பற்றியது. இப்போது சீனா அந்த இடத்துக்கு வந்துவிட்டது.
அத்துடன் சீனா இப்போது அமெரிக்காவை முந்திவிடும் போலிருக்கிறது. இதனால் அமெரிக்காவும் சீனாவும் உக்ரைனை பயன்படுத்தி சண்டையிட்டு வருகின்றன.
இந்த நிலையில் போரை எதிர்க்கும் ஒரே நாடு இந்தியாவாகும்.
இலங்கையை பொறுத்தவரை, அது சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நட்புறவைக்
கொண்டிருந்தது.
ஆனால் அது சிக்கலில் இருந்தபோது இந்தியா மட்டுமே அதற்கு உதவியது என்று
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.