உக்ரைனின் தாக்குதலினால் திணறும் ரஷ்யா! அவசர அவசரமாக மூடப்படும் விமான நிலையங்கள்
உக்ரைன் இராணுவத்தின் ட்ரோன் தாக்குதலுக்கு பயந்து மாஸ்கோ நகரில் இரண்டு விமான நிலையங்களை ரஷ்யா அவசரமாக மூடியுள்ளது.
இராணுவ விமானத்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சூப்பர்சோனிக் அணு குண்டுவீச்சு விமானமொன்று ட்ரோன் தாக்குதலில் சேதமடைந்த நிலையில் ரஷ்யா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, தலைநகர் மாஸ்கோவில் செயல்பட்டு வரும் Domodedovo மற்றும் Vnukovo விமான நிலையங்களை தற்காலிகமாக மூடப்படுவதுடன் அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த இரு விமான நிலையங்களில் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்ட நிலையில், 50 மைல்கள் தொலைவில் உள்ள Sheremetyevo விமான நிலையத்திற்கு விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன.

உக்ரைனில் தீவிரமடையும் பயங்கரவாத தாக்குதல்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் விலையுயர்ந்த போர் விமானம் ஒன்று ட்ரோன் தாக்குதலில் சேதமடைந்துள்ளதை அடுத்தே ரஷ்ய அதிகாரிகள் இந்த முடிவினை அறிவித்துள்ளனர்.
உக்ரைனில் இருந்து சுமார் 700 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள இராணுவ விமான நிலையத்திலேயே அந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தாக்குதலில் சேதமடைந்த போர் விமானத்தை உடனடியாக இன்னொரு பகுதிக்கு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலை அடுத்து, உக்ரைன் பயங்கரவாத தாக்குதலை முன்னெடுக்க துவங்கியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri