தீவிரமடையும் ட்ரோன் தாக்குதல்! போரின் அடுத்தகட்ட நகர்விற்கு ரஷ்யா செய்த இரகசிய சதி அம்பலம்
ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் கோபுரத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா ட்ரோன் தாக்குதல் ரஷ்யாவின் இரகசிய சதியென அமெரிக்காவின் `The Institute for the Study of War' அமைப்பு தெரிவித்துள்ளது.
மே 9 ஆம் திகதி நடைபெற்ற `வெற்றி தின' அணிவகுப்புக்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல் திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் எனவும் தெரிவித்துள்ளது.
ரஷ்ய கூட்டமைப்பின் தலைவரை கொல்ல இரண்டு ஆளில்லா ட்ரோன்களை கிரெம்ளின்மீது உக்ரைன் ஏவியிருந்ததாக உக்ரைன் ரஷ்யா பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தது.
மேலும், ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவரான டிமிட்ரி மெத்வதேவ், ``உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் அவரது குழுவையும் கொலை செய்ய வேண்டிய நேரம் இது என்று பரபரப்பு கருத்தையும் தெரிவித்திருந்தார்.
உலக நாடுகளிடம் அனுதாபம் தேடும் ரஷ்யா
இந்நிலையில், ரஷ்ய குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த உக்ரைன், புடினுக்கு இந்தப் போரில் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. அதனால், அவரின் படையை இனி ஊக்குவிக்க முடியாத நிலையில், ரஷ்ய வீரர்களை இனியும் மரணத்தை நோக்கி அனுப்ப முடியாது.
எனவே, தனது படை முன்னோக்கிச் செல்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் தாக்குதல் நாடகம் நடத்தப்பட்டிருக்கின்றது. ரஷ்யாவின் நாடகம் இதுவெனவும், வெற்றி தினத்துக்கு முன்பு ஒரு பதற்றமான சூழலை உருவாக்கி, உலக நாடுகளிடம் அனுதாபம் தேட ரஷ்யா நினைப்பதாகவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் அமெரிக்காவின் `The Institute for the Study of War' அமைப்பு, ``ரஷ்யாவின் பல அடுக்கு வான் பாதுகாப்புகளைத் தாண்டி, அந்த நாட்டின் இதயமான கிரெம்ளின் வரை ட்ரோன்கள் வந்திருக்க வாய்ப்பேயில்லை.இது அழகாக கமெராவில் படம் பிடிக்கப்பட்டிருப்பதும் சந்தேகத்தைக் கிளப்புகின்றது.
இந்தத் தாக்குதல் நாடகத்தை அரங்கேற்றி, ரஷ்ய மக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகச் சொல்லி போரை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல புடின் திட்டமிட்டிருக்கலாம்'' என்று தெரிவித்திருக்கின்றது.
ஆளில்லா ட்ரோன்கள் குறித்து ஆராய்ந்த மேற்கத்திய நிறுவனங்கள், ``கிரெம்ளினை நோக்கி வந்த ஏவுகணைகள் உக்ரைனிலிருந்து வந்தவை அல்ல..! ரஷ்யாவிலிருந்து ஏவப்பட்டிருக்கின்றன'' என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்து.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |