ரஷ்யாவுக்கு மறைமுகமாக இராணுவ உதவிகளை வழங்கும் சீனா! அமெரிக்க உளவுத்துறை இரகசிய தகவல்
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய இராணுவத்திற்கு இராணுவ சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை சீனா வழங்கி வருவதாக அமெரிக்கா உளவுத்துறை அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுடன் அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டித்த பிறகு, சீனா அதற்கு முக்கியமான வர்த்தக கூட்டாளியாக உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் அரச பாதுகாப்பு
மேலும், சுங்கத்துறை தகவல்களின் அடிப்படையில் ரஷ்யாவுக்கு கடல் பயணத்திற்குரிய சாதனங்கள், தொழில்நுட்ப சாதனங்கள், போர் ஜெட் விமானங்களுக்கான உதிரி பாகங்கள் போன்றவற்றை சீனாவின் அரச பாதுகாப்பு நிறுவனங்கள் அனுப்பி வருவதாகவும் அமெரிக்கா தனது உளவுத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், இதற்கு பதிலாக சீனாவுக்கு கச்சா எண்ணெயில் விலைத் தள்ளுபடிகளை ரஷ்யா அளித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சீனா மீதான அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டிற்கு சீனா இதுவரை எந்தவித மறுப்பினையும் வெளியிடாது மௌனமாக உள்ளமை மேற்கத்திய நாடுகளின் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
