தீவிரமடையும் போர் பதற்றம்! உக்ரைன் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள குடியிருப்பு கட்டடங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் ஜி20 மாநாட்டிற்காக உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடியுள்ள நிலையில் உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளமை மீண்டும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கமைய, உக்ரைனின் மிகோலைவ், செர்னிவ், சபோரிசியா ஆகிய இடங்களில் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உத்தரவு
இதேவேளை, தலைநகர் கீவ் உட்பட பல பகுதிகளில் வான்வழி தாக்குதல் குறித்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளமையினால் ஏவுகணை தாக்குதல் தொடர்வதால் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று செர்னிவ் நகரின் மேயர் வ்யாசெஸ்லவ் சாயஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜி20 மாநாட்டிற்காக இந்தோனேசியாவில் ஒன்றுகூடிய தலைவர்கள் யுக்ரேனில் நடைபெற்று வரும் போர் குறித்து தங்களின் கண்டனங்களை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.