ரஷ்ய ஜனாதிபதியை கைது செய்ய பிடிவிராந்து - முக்கிய மாநாட்டிற்கு செல்ல தயங்கும் புடின்
தென்னாப்பிரிக்காவில் மாநாடு நடைபெற உள்ள நிலையில், அங்கு சென்றால், தான் கைது செய்யப்படலாம் என புடின் அஞ்சுவதாக கூறப்படுகின்றது.
உக்ரைனில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்காக புடினைக் கைது செய்யுமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியானை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஒப்பந்தத்தின் கீழ் நாட்டில் கால் வைத்தால், அவரை அந்த நாடு கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புடினை கைது செய்யுமாறு உத்தரவு
தென்னாப்பிரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் நல்ல உறவு இருந்தாலும், தென்னாப்பிரிக்கா, கைது வாரண்டைத் தொடர்ந்து மாநாட்டுக்காக வரும் புடினைக் கைது செய்து கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The BRICS என்பது, பிரேசில், ரஷ்யா, இந்தியா சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய ஒரு வளர்ந்துவரும் வலிமையான வர்த்தக கூட்டமைப்பாகும். கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் புடின் உள்ளதாக கூ றப்டுகின்றது.