தீவிரமடையும் ரஷ்யாவின் வான்வழி தாக்குதல்! தீப்பற்றி எரிந்த உணவு சேமிப்பு கிடங்கு
உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரான ஒடேசாவில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் உணவு சேமிப்பு கிடங்கொன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் கிர்கிவ், கெர்சன், மைகோலே , மற்றும் ஒடேசாவில் ரஷ்யா 16 ஏவுகணைகள் மூலம் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் அவசர சேவை அமைப்பு வெளியிட்ட தகவல்
குறிப்பாக ஒடேசாவில் உள்ள உணவு சேமிப்பு கிடங்கில் சக்தி வாய்ந்த ஏவுகணை வீசப்பட்டதில் குறித்த கட்டடம் தீப்பற்றி எரிந்துள்ளது.
மேலும், இந்த தீயை அணைக்க இராணுவத்தினரும், தீயணைப்பு வீரர்களும் போராடிய காட்சிகளை உக்ரைன் அவசர சேவை அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதேவேளை,ரஷ்யாவின் உரால் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்துள்ளன.