மீண்டும் உக்கிரமடையும் போர் பதற்றம்! ரஷ்யாவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள எச்சரிக்கை
உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல்களை ரஷ்யா நடத்த வேண்டாம் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
மேலும் ரஷ்ய அதிபர் மாளிகை மீதான தாக்குதலுக்கு உக்ரைன் காரணமில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியம் விளக்கமளித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக்கொள்கை தலைவர் ஜோசப் பொரெல் இதனை தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள எச்சரிக்கை
மேலும் ரஷ்ய அதிபர் மீதான தாக்குதல் குறித்துப் பேசிய அவர், உக்ரைனியர்கள் தங்கள் நாட்டைப் பாதுகாப்பதாகவும், தங்கள் மண்ணுக்காகப் போராடுவதாகவும், ரஷ்யா மீதான தாக்குதலுக்கு உக்ரைன் தொடர்பில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதேவேளை, போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், தெற்கு உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பகுதியளவு மக்களை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
உக்ரைன் தரப்பு ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள சொந்த நகரங்கள் மீதே தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஜாபோர்ஜியா அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதி உட்பட 18 இடங்களில் இருந்து குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆகியோர் முதற்கட்டமாக வெளியேற்றப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.