உக்ரைனில் இரவோடு இரவாக தாக்குதல் நடத்திய ரஷ்யா! 8 பேர் பலி - பலர் படுகாயம்
உக்ரைனின் பல்வேறு நகரங்களில் இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
மேற்கத்திய நாடுகள் பல உக்ரைனில் ஆயுதங்களை குவித்து வரும் நிலையில் மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்த உக்ரைன் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
விபத்தில் சிக்கி 6 பேர் பலி
இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில், கீவ், உமன், டினிப்ரோ உட்பட பல நகரங்களில் ஏவுகணைகளை ஏவி ரஷ்யா திடீரென தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் உமனில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதுடன், தீ விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர்.
டினிப்ரோவில் நடத்தப்பட்ட தாக்குதலில் குழந்தையொன்றும், இளம் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, தலைநகர் கீவ்-வில் நள்ளிரவு முழுவதும் வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை சைரன் ஒலித்தமையினால் மக்கள் அச்சமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.