ஆள் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ரஷ்யா! அதிரடி திட்டங்கள் அறிவிப்பு
உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைன் போருக்கு ஆள் திரட்டும் பணியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது.
இதற்கமைய, இராணுவத்தில் சேர முன்வருவோருக்கு வரிச்சலுகை, கடன் தவணை செலுத்துவதிலிருந்து விலக்கு போன்ற சலுகைகளை அறிவித்துள்ளது.
திட்டங்கள் அறிவிப்பு
கடந்த முறை, 3 இலட்சம் பேரை இராணுவத்தில் சேர்க்க அதிபர் புடின் உத்தரவிட்டபோது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நாட்டை விட்டே வெளியேறியுள்ளனர்.
மேலும் இராணுவத்தில் இணைய மறுக்கும் வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மீண்டும் ஆள் சேர்க்கும் பணியில் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
இராணுவத்தில் சேர்வோரின் வாரிசுகளுக்கு பல்கலைக்கழகங்களில் முன்னுரிமை, உயிரிழக்கும் பட்சத்தில் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை அதிகரிப்பு போன்ற விளம்பரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.