உக்ரைன் போரில் உயிரிழந்த குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
உக்ரைன் - ரஷ்ய போர் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை உக்ரைனில் 462 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதுடன், 930 குழந்தைகள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களின் எண்ணிக்கையில் உக்ரைனிய அதிகாரம் அதன் சமீபத்திய புதுப்பிப்பை வெளியிட்டபோது புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
இதுவரை மொத்தம் 72,620 ஆக்கிரமிப்பு மற்றும் போர்க்குற்றங்கள் பதிவாகியுள்ளன, அத்துடன் தேசிய பாதுகாப்புக்கு எதிரான 16,855 குற்றங்கள் பதிவாகியுள்ளன.
டிரம்ப் சூளுரை
ரஷ்ய அமைச்சர்கள், பிரதிநிதிகள், இராணுவக்கட்டளை அதிகாரிகள், சட்ட அமலாக்கத் தலைவர்கள் மற்றும் கிரெம்ளின் பிரச்சாரகர்கள் ஆகியோரைக் கொண்ட 639 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றால், உக்ரைன் போரை ஒரே நாளில் நிறுத்திவிடுவேன் எனவும்,தன்னால் மட்டும் தான் மூன்றாம் உலகப்போர் நேராமல் தடுக்க முடியும் என்றும் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்ய அதிபர் புடின் தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும், தனது பேச்சுக்கு செவி சாய்ப்பார் என்றும், தன்னால் மட்டும் தான் மூன்றாம் உலகப்போர் நேராமல் தடுக்க முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.