ரஷ்யா மீது சரமாரியாக டிரோன்கள் தாக்குதல்: 2,737 கோடி மதிப்புள்ள உளவு விமானங்களை சுட்டு வீழ்த்திய டிரோன்கள்
உக்ரைன்- ரஷ்ய போர் தாக்குதல் ஓராண்டை கடந்துள்ள நிலையில் ரஷ்யா மீது நேற்று உக்ரைன் சரமாரியாக டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவி வரும் நிலையில் ரஷ்யா பல்வேறு வகையில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய திடீர் தாக்குதலில் பெலாரஸில் உள்ள ரஷ்ய விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2737 கோடி மதிப்புள்ள உளவு விமானம் இரண்டு டிரோன்கள் மூலம் அழிக்கப்பட்டுள்ளன.
உக்ரைன் எல்லையில் கடுமையான பாதுகாப்பு
இதனை தொடர்ந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள புல்கோவோ விமான நிலையத்தை தற்காலிகமாக மூடுவதாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில் சில மணி நேரங்களுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
தெற்கு மற்றும் மேற்கு ரஷ்யாவில் தொடர்ந்து டிரோன்கள் மூலம் தாக்குதல் நடந்துள்ளதுடன்,அதை சுற்றி வந்த டிரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
இதன்போது மாஸ்கோவிலிருந்து 100 கிமீ தொலைவில் உள்ள குபாஸ்டோவோ கிராமத்தின் அருகே டிரோனொன்று விழுந்ததையடுத்து உக்ரைன் எல்லையில் பாதுகாப்பை கடுமையாக்குமாறு அதிபர் புடின் வலியுறுத்தியுள்ளார்.