ரஷ்ய தாக்குதலில் 600 உக்ரைன் வீரர்கள் பலி - ரஷ்யா அறிவிப்பு
உக்ரைனின் கிழக்குப்பகுதியில் ராக்கெட் வீசி நடத்திய தாக்குதலில் 600 வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
அண்மையில் மகீவ்கா நகரில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் 89 பேர் கொல்லப்பட்ட நிலையில் இதற்கு பதிலடியாக, இந்த பயங்கரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கிழக்கு உக்ரைனில் உக்ரைன் வீரர்கள் தங்கியிருந்த தற்காலிக இராணுவ தளத்தின் மீது ரஷ்ய படைகள் அடுத்தடுத்து ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனிடையே, ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று கிராமடோர்ஸ்க் மேயர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் சிறை கைதிகளை பரிமாறி கொண்டதில் மொத்தம் 100 இராணுவ வீரர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
