உக்ரைனுக்கு தேவை ஆயுதங்கள்! ஆயுதங்கள்! ஆயுதங்கள்! (video)
உக்ரைன் நாட்டின் கிழக்கில் எதிர்பார்க்கப்படும் ரஷ்யாவின் புதிய இராணுவத் தாக்குதல்களுக்கு எதிராக உக்ரைனுக்கு எவ்வாறு சிறந்த ஆயுதங்களை வழங்குவது குறித்து பிரசல்ஸில் ஆராயப்படவுள்ளது.
இதற்காக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் பிரசல்ஸூக்கு சென்றுள்ளார் சந்திப்புக்கு முன்னர் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் குலேபா, எவ்வளவு விரைவில் பொருட்கள் வந்து சேருகிறதோ, அவ்வளவு மனித உயிர்கள், நகரங்கள் மற்றும் நகரங்கள் அழிவிலிருந்து காப்பாற்றப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உக்ரைனியப் பிரதிநிதிகள் குழுவொன்று இங்கிலாந்துக்கு சென்று ஆயுதங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளது.
இந்த பயணத்தின்போது உக்ரைனியர்களுக்கு "தற்காப்பு ஏவுகணை அமைப்புகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட நடமாடும் வாகனங்கள் உட்பட மேலும் இராணுவ ஆதரவுக்கான பலவிதமான உபகரணங்கள் தொடர்பில் ஆராயப்படும் என்று இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில்- வேகமான, இலகுரக உளவு வாகனமும் ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.