உக்ரேன் விவகாரம் உலக யுத்தமாக மாறுமா? பதில் தேடிய ஒரு பயணம்!!
"தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற உக்ரேன்- ரஷ்யப் போர் என்பது, ஒரு உலக யுத்தத்தை நோக்கி நிலமையை இட்டுச் சென்றுவிடுமா?" -இது பலராலும் அச்சத்துடன் எழுப்பப்பட்டுவருகின்ற ஒரு கேள்வி.
இந்தக் கேள்விக்கான பதிலை 'இல்லை' என்ற ஒற்றைச் செல்லில் யாரும் கூறிவிடமுடியாது.
ஏனென்றால் ஏற்கனவே நடந்துவிட்டுள்ள இரண்டு உலக யுத்தங்களின் பின்னணிகள், அந்த யுத்தங்களுக்கு சற்று முன்னய காலங்களில் நடைபெற்ற சம்பவங்கள், ஒவ்வொரு நாட்டுக்கும் இருந்த தேவைகள், நியாயப்பாடுகள்... இவற்றையெல்லாம் தற்பொழுது உக்ரேன் தொடர்பான காட்சிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்ற போழுது, ஒரு உலக யுத்தம் நடைபெறுவதற்கான சாத்தியமே இல்லை என்கின்ற பதிலை உடனடியாக, உறுதியாக யாராலுமே வழங்கிவிடமுடியாது.
'தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற உக்ரேன்- ரஷ்யப் போர் ஒரு உல யுத்தமாக மாறுமா?'- என்ற கேள்விக்கான உண்மையான பதிலை நாம் தேடவேண்டுமானால்,
அதற்கான பதிலை வேறு சில யுத்தங்களில் தேட வேண்டும்...
அந்த யுத்தங்களின் பின்னணியில் தேடவேண்டும்...
அந்த யுதங்களுக்கான காரணங்களில் தேட வேண்டும்...
அந்த ஒரு தேடல் முயற்சிதான் இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி: