இங்கிலாந்து பெண் பாலியல் துஷ்பிரயோகம்-மசாஜ் நிலைய ஊழியர் கைது
மசாஜ் நிலையத்திற்கு சென்ற வெளிநாட்டு பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பான அஹங்கம பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் அஹங்கம கபலான பிரதேசத்தில் உள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையத்தில் சேவையாற்றி வருபவர்.
அங்கு சென்றிருந்த இங்கிலாந்து பெண் ஒருவருக்கு மசாஜ் செய்துக்கொண்டிருந்த போது சந்தேக நபர் பெண்ணின் பிறப்புறுப்பை தொட்டதாக அந்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை நடத்திய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார். சம்பவம் குறித்து அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் 4 மணி நேரம் முன்

சாலையில் நடந்த கோர சம்பவம்... புகைப்படம் வெளியிட்டு பொதுமக்கள் உதவி கோரிய பிரித்தானிய பொலிசார் News Lankasri

மகனை தூங்கவிடாமல் 17 மணிநேரம் வீடியோ கேம் விளையாட வைத்த தந்தை! இப்படியும் தண்டனை வழங்கலாமா? News Lankasri
