ஐரோப்பா செல்ல முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
ஐரோப்பா உட்பட மேற்குலக நாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பாரியளவிலான நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு தொழிலுக்காக அனுப்புவதாக கூறி அதிகளவிலான இளைஞர் யுவதிகள் ஏமாற்றப்பட்டு வருவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
இதனால் முறையான வழிமுறைகளை மாத்திரம் பயன்படுத்தி நம்பகத்தன்மையுடன் கூடிய கல்வி நிலையங்கள், முகவர் நிலையங்கள் என்பனவற்றின் ஊடாக பயணங்களை மேற்கொள்ளுமாறு பொலிஸார் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்கள்.
பொலிஸில் முறைப்பாடு
அண்மைக்காலமாக வெளிநாடு செல்வதற்காக இலங்கையர்கள் பெருமளவு பணத்தை இழந்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இதேவேளை, ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடும் முகவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையம்
அதற்கமைய கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan
