இலங்கைக்கான பயண ஆலோசனைகளை புதுப்பித்த இங்கிலாந்து
விடுமுறையில் இலங்கை செல்வோருக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில் இலங்கைக்கான பயண ஆலோசனைகளை, இங்கிலாந்து (England) வெளியுறவு அலுவலகம் புதுப்பித்துள்ளமை சுற்றுலா பிரசாரகர்களுக்கு கிடைத்த வெற்றி என இங்கிலாந்தின் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தின் வெளியுறவு அலுவலகம் தனது இலங்கை பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளதுடன், தீவில் பாதுகாப்பு குறித்த எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளது.
இதுவரையில் இலங்கைக்கான பயணத்திற்கு எதிராக இங்கிலாந்து அரசாங்கம் அறிவுறுத்தவில்லை. என்றாலும், இந்த மாத தொடக்கம் வரை எரிபொருள் மற்றும் உணவுப் பற்றாக்குறை, அத்துடன் பல மின்வெட்டு மற்றும் சாத்தியமான அரசியல் அமைதியின்மை உள்ளிட்ட அபாயங்கள் குறித்து தமது நாட்டவர்களை எச்சரித்து வந்தது.
2022 இல் நடந்த நிகழ்வுகள்
இந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம், எக்ஸ்பீரியன்ஸ் டிராவல் க்ரூப் என்ற அமைப்பு, இலங்கைக்கான வெளியுறவு அலுவலகத்தின் ஆலோசனை, "இலங்கைக்கான முறையான பயணத் துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது" என்று ஒரு திறந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது.
ஏனெனில் இங்கிலாந்தின் எச்சரிக்கை 2022 இல் நடந்த நிகழ்வுகளுக்கு முந்திய நிலைமையாகும் என்றும், எக்ஸ்பீரியன்ஸ் டிராவல் க்ரூப் வாதிட்டிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 16 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
