பிரித்தானியா அறிமுகப்படுத்தும் கடுமையான எல்லை விதி.. இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு சிக்கல்
எதிர்வரும் பெப்ரவரி 25ஆம் திகதி முதல், பிரித்தானியாவுக்குள் நுழையும் அனைத்து பயணிகளும் பிரித்தானியா அல்லது ஐரிஷ் கடவுச்சீட்டு அல்லது செல்லுபடியாகும் மின்னணு பயண அங்கீகாரம் (ETA) வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், உள்துறை அமைச்சகத்தின் இறுதி நேர அறிவிப்பின் படி, இரட்டை பிரித்தானிய குடியுரிமை கொண்டவர்கள் குறிப்பாக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் பிரித்தானிய குடியினரும் இனி அவுஸ்திரேலிய கடவுச்சீட்டுடன் ETA பயன்படுத்த முடியாது.
அவர்கள் விமானச் சேவையில் ஏறும் முன் செல்லுபடியாகும் பிரித்தானிய கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் £589 கட்டணத்துடன் Certificate of Entitlement (COE) பெற வேண்டிய நிலை ஏற்படும். இந்த ஆவணம் வழங்கப்படுவதற்கு பல வாரங்கள் எடுக்கலாம்.
கடவுச்சீட்டு பெறுவோர்..
விதிமுறைகளை பின்பற்றாத பயணிகளை விமான மற்றும் கப்பல் சேவைகள் ஏற்ற மறுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

தொழில் பயணம், குடும்பச் சந்திப்பு அல்லது பாடசாலை விடுமுறை காரணமாக முன்பதிவு செய்த பலர் பின்னர் இச்சிக்கலை அறிந்துள்ளனர். குறிப்பாக குடும்பங்களுக்கு செலவு அதிர்ச்சி அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவில் இருந்து நான்கு பிரித்தானிய கடவுச்சீட்டை புதுப்பிக்க AU$1,100க்கும் அதிகமாக செலவாகும், கூரியர் கட்டணம் இதில் சேர்க்கப்படவில்லை.
பயணத் திட்டங்களில் தெளிவு பெற விரும்புவோர் அல்லது அவசர ஆவண செயல்முறைகளை விரைவுபடுத்த வேண்டியோர் VisaHQ நிறுவனத்தின் அவுஸ்திரேலிய தளத்தில் தங்கள் பயண விபரங்களை பதிவு செய்து ETA தகுதி, கடவுச்சீட்டு புதுப்பிப்பு அல்லது COE விண்ணப்பம் குறித்த தகவல்களை அறியலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.