எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த ஐக்கிய இராச்சியத்தின் விசேட தூதுக் குழுவினர்
ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசுபிக் பிராந்திய அமைச்சர் கெத்தரின் வெஸ்ட் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்று (27) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இலங்கையின் பல்வேறு பொருளாதார, சமூக, அரசியல் விடயங்கள் தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளன.
பொருளாதார நெருக்கடி
இந்நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளுவதற்குத் தேவையான ஆதரவை வழங்குமாறும், சுற்றுலாத் துறை தொடர்பாக ஐக்கிய இராச்சிய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் இந்த தூதுக்குழுவினரிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில், ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசுபிக் பிராந்திய அமைச்சர் கெத்தரின் வெஸ்டின், பிரத்தியேக செயலாளர் ரோப் கோர், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக்ஸ், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளர் அலெக்சாண்டர் ஸ்மித் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன ராஜகருணா, முஜிபுர் ரஹ்மான், காவிந்த ஜயவர்தன மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
