பிரித்தானியாவில் முதல்முறையாக AI எம்.பி
முதல்முறையாக பிரித்தானியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) நாடாளுமன்ற உறுப்பினர் உருவாக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் Leeds South West மற்றும் Morley தொகுதியின் லேபர் கட்சி எம்.பி. மார்க் சீவார்ட்ஸ் (Mark Sewards) தன்னைப் போலவே ஒரு AI பதிப்பை உருவாக்கியுள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு
இது ஒரு AI Chatbot ஆகும். இது Neural Voice என்ற நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இதுவே பிரித்தானியாவின் முதல் மெய்நிகர் பதிப்பு என அழைக்கப்படுகிறது.
MP @MarkJSewards votes for Universal Credit cuts while his AI avatar says: 'I do not support cuts to Universal Credit'
— Sussex Globe (@SussexGlobe) August 8, 2025
And don't get them started on how many asylum hotels are in their constituency
Hope Sussex MPs are paying attention! pic.twitter.com/5idAz7S0Kz
இந்த AI Chatbot மார்க் சீவார்ட்ஸின் குரலில் பதிலளிக்கும். இதன்மூலம், பொதுமக்கள் எந்நேரத்திலும் உதவியை பெறலாம்.
இந்த முயற்சி பொதுமக்களுக்கும் எம்.பி. அலுவலகத்திற்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் என நம்பப்படுகிறது.
மக்கள் இந்த புதிய AI தொழில்நுட்பத்தை ஏற்கவேண்டும் எனவும், "நீங்கள் இதில் ஈடுபடாமல் விட்டுவிட்டால் நாம் பின்னோக்கி செல்ல நேரிடும்" என்றும் எம்.பி. மார்க் சீவார்ட்ஸ் கூறியுள்ளார்.
எனினும் இதனால் மனித உறவுகள் குறையும், தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வளிக்க முடியாது என பல விமர்சனங்களும் எழுந்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



