பருவநிலை மாநாட்டிலிருந்து திடீரென வெளியேறிய ரிஷி சுனக்! வெளியான காணொளியினால் சர்ச்சை
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் சா்வதேச பருவநிலை மாநாட்டில் இருந்து திடீரென இ்டை நடுவில் வெளியேறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்தில் ஐ.நாவின் பருவநிலை மாநாடு தொடங்கி நடந்து வருகின்றது. இதில் பங்கேற்கவில்லை என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் முதலில் அறிவித்த நிலையில் பின்னர் தனது முடிவை மாற்றி கொள்வதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், பருவகால மாநாட்டு நிகழ்ச்சியில் திடீரென பாதியிலேயே ரிஷி சுனக் வெளியேறியுள்ளார்.
UK prime minister @RishiSunak has just been rushed out of the room by his aides during the middle of the launch for forests partnership at #COP27 pic.twitter.com/OQy9TYkqpX
— Leo Hickman (@LeoHickman) November 7, 2022

ரிஷி மேடையில் இருந்து கீழே இறங்கி செல்வதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்பு அவரது உதவியாளர்கள் மேடைக்கு வந்து அவரிடம் ஏதோ கூறிய நிலையில், அங்கிருந்து மாநாட்டின் பாதியிலேயே ரிஷி சுனக் வெளியேறியுள்ளார்.
இந்நிலையில், ஜேர்மனியர்கள் மற்றும் தென்னாப்பிரியர்களை ரிஷி சந்திப்பதாக தாமதமாக முடிவு செய்யப்பட்டது, அதனால் தான் அவர் சென்றார் என தெரிவித்துள்ளார்.