பிரித்தானிய பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் போரிஸ் ஜோன்சன்! உலக செய்திகளின் தொகுப்பு
பிரித்தானிய பிரதமர் பதவியில் இருந்து லிஸ் டிரஸ் விலகியதையடுத்து அப்பதவிக்கு மீண்டும் போட்டியிடவுள்ளதாக போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமரான அவர் கோவிட் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாகப் முறைப்பாடு வந்ததையடுத்து, பதவி விலகியிருந்தார்.
இதனையடுத்து, அவருடைய பொறுப்புக்கு லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எனினும் அவர், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து விலகுவது குறித்து மன்னர் மூன்றாவது சார்ள்ஸூக்கு அறிவித்துள்ளதாக நேற்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே, பிரித்தானிய பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டியிடவுள்ளதாக போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,