உக்ரேனிய வீரர்களை பயிற்றுவிக்க தயாராகும் பிரித்தானியா
உக்ரேனிய (Ukraine) இராணுவ வீரர்களுக்கு பயிற்சி வழங்க பிரித்தானிய (UK) இராணுவம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்திட்டம் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி (John Healey) தெரிவித்துள்ளார்.
அவர் தனது உக்ரைன் பயணத்தின் போது, உக்ரேனியப் படைகளுக்கான உள்நாட்டு பாதுகாப்புப் பயிற்சி திட்டத்தை விரிவாக்கம் செய்வது குறித்து கலந்துரையாடியுள்ளார்.
புதிய திட்டங்கள்
இந்நிலையில், உக்ரேனியர்கள் தங்கள் தேவைகளை எளிதாக நிறைவேற்ற உதவ வேண்டும் என்றும் புதிய வீரர்களுக்கு முறையாக பயிற்சி அளித்து இராணுவத்தில் இணைப்பதில் உதவ வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், அவர் உக்ரைனின் பாதுகாப்புச் செயலாளர் ருஸ்டெம் உமேரோவ் உடனான சந்திப்பில், 2025ஆம் ஆண்டுக்கான பிரித்தானியாவின் 5 அம்ச திட்டம் குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.
மேற்படி, அத்திட்டத்தில் கூடுதல் பயிற்சி, ஆயுதங்கள், தொழில்துறை ஆதரவு போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உக்ரைனின் படைகளுக்கு புதிய வீரர்களை சேர்க்கும் முயற்சிகள் சவாலாக இருப்பதுடன், போர் வீரர்களின் தன்னிச்சையான விலகல்களும் அதிகரித்துள்ளன.
இதன் காரணமாக உக்ரைனின் பாதுகாப்பு நிலையை மேம்படுத்த இவ்வாறான புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |