பிரித்தானிய பாராளுமன்றத்தில் திடீரென கூச்சலிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களால் குழப்பம்
பிரித்தானிய பாராளுமன்றத்தில் திடீரென நுழைந்து கூச்சலிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
பிரித்தானிய பாராளுமன்ற மேல் சபையில் காலநிலை ஆர்வலர்கள் பயன்படுத்தும் கொரில்லா உத்திகளை ஒடுக்குவதற்கு புதிய எதிர்ப்பு சட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பிரித்தானிய பாராளுமன்ற மேல் சபையில் மசோதா வாசிக்கப்படும் போது சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுவொன்று திடீரென கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
இதன்போது, Extinction Rebellion என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுவின் 12 உறுப்பினர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இவர்கள் ''மனித உரிமைகளைப் பாதுகாப்போம்'' என்ற வாசகம் தாங்கிய உடைகளை அணிந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். வாயை மூடுங்கள் என்று கூறி அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றியுள்ளனர்.
இந்த இடையூறினால் மேல்சபை ஐந்து நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், பாராளுமன்ற மேல்சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.