பிரித்தானியாவில் தீவிரமடையும் போராட்டக்களம்.. 100இற்கு மேற்பட்டோர் கைது!
பாலஸ்தீன நடவடிக்கையை பயங்கரவாதக் குழுவாக தடை செய்யும் தீர்மானத்திற்கு எதிராக பிரித்தானியா முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் கிட்டத்தட்ட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்றைய தினம், லண்டன், எடின்பர்க், மான்செஸ்டர், பிரிஸ்டல் மற்றும் ட்ரூரோவில் பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர் குழுவிற்கு ஆதரவாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
வெஸ்ட்மின்ஸ்டரில் நடந்த மிகப்பெரிய போராட்டங்களில், பாலஸ்தீன நடவடிக்கைக்கு ஆதரவாக பதாகைகளை வைத்திருந்ததற்காக பயங்கரவாத குற்றங்கள் தொடர்பான சந்தேகத்தின் பேரில் 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதக் குழு
கடந்த 2000ஆம் ஆண்டு பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் அரசாங்கம் இந்த மாத தொடக்கத்தில் பாலஸ்தீன குழுவைத் தடை செய்தது, RAF தளத்தில் நடந்த ஊடுருவலைத் தொடர்ந்து, குறித்த குழுவில் உறுப்பினராக இருப்பது அல்லது அதற்கு ஆதரவளிப்பது குற்றவியல் நடவடிக்கை என பிரித்தானியா தெரிவித்தது.
❗️❗️BREAKING: 55 activists, most of them elderly have been arrested.
— Moh Musthafa Hussain (@musthafaaa) July 19, 2025
This comes as similar demonstrations are taking place nationwide which are being heavily policed simply because people of conscience are holding signs supporting Palestine Action and opposing genocide.
[G& pic.twitter.com/asU1C5x2Nv
இந்நிலையில் குறித்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானிய முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், நாடு முழுவதும், போராட்டக்காரர்கள் "நான் இனப்படுகொலையை எதிர்க்கிறேன். பாலஸ்தீன நடவடிக்கையை ஆதரிக்கிறேன்" என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, அதிரடியாக களமிறங்கிய பிரித்தானிய பொலிஸ் அதிகாரிகள், கிட்டத்தட்ட 100 பேரை கைது செய்துள்ள நிலையில் கைதானவர்களில் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
