பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு.. சர்வதேசத்தில் அதிகரிக்கும் போர்பதற்றம்
பிரித்தானியா மற்றும் நேட்டோ படைகள் ரஷ்ய போர் விமானங்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பிரித்தானிய வெளியுறவு செயலாளர் அறிவித்துள்ளார்.
அதன்படி, ஐரோப்பாவின் வான்வெளியில் அத்துமீறி நுழையும் ரஷ்ய போர் விமானங்களை எதிர்கொள்ள பிரித்தானியா மற்றும் நேட்டோ படைகள் தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கடும் எச்சரிக்கை
இது தொடர்பாக நியூயோர்க்கின் ஐ.நா பாதுகாப்பு ஆணையகத்திடம் பேசிய அவர், நேட்டோ பிராந்தியத்திற்குள் அனுமதியின்றி நுழையும் ரஷ்ய விமானங்களுக்கு எதிராக தங்கள் இராணுவ படை உடனடி நடவடிக்கை எடுக்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷ்யாவின் அண்மைக்கால நடவடிக்கைகள் பொறுப்பற்றதாகவும், அபாயகரமானதாகவும் இருப்பதாக பிரித்தானிய வெளியுறவு செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷ்யாவின் இத்தகைய நடவடிக்கை ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை குலைக்கும் முயற்சி என்றும் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய தொடர் செயல்கள் ரஷ்யா மற்றும் நேட்டோ படைகளுக்கு இடையிலான நேரடி ஆயுத மோதலுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 5 மணி நேரம் முன்
6 நாள் முடிவில் வெற்றிநடைபோடும் ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது செய்த மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
தாஜ்மகாலுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணுக்கு பிறந்த கருப்பு நிற குழந்தைகள்! உண்மை என்ன? News Lankasri